நடிகர்கள் அரசியலுக்கு வருவதை மக்கள் ஆதரிப்பார்கள் என்று பார்த்தால் சுதாரித்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும். தற்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த் அடுத்தபடியாக தளபதி விஜய்யும் விரைவில் கட்சியைத் தொடங்கி, வரும் 2021 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக கோலிவுட்டில் பரபரப்பை கிழப்பி உள்ளது.
தளபதி விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இதற்க்காக வழக்கறிஞரை சந்தித்து, விஜயின் அலுவலகத்தில் வைத்து பேசி உள்ளாராம். இதே வழக்கறிஞர் முன்னணி நடிகர்களுக்கு சின்னங்களை கட்சி பெயரை மற்றும் சின்னங்களை பதிவு செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ஒவ்வொரு படங்களிலும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பு வந்து கொண்டிருப்பதால், சொத்துக்களை பாதுகாக்கும் முக்கியமான ஒரு கட்டத்தில் தற்போது தள்ளப்பட்டுளார் தளபதி.
அதுமட்டுமில்லாமல் கோடான கோடி ரசிகர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதால் இந்த தேர்தலில் அவர் நின்றால் ஒரு சில இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாம்.
அது மட்டுமில்லாமல் அவருக்கு முன்னுதாரணமாக மூத்த நடிகர் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆதரவும் உள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில், இதுபோன்ற வேலைகளில் இறங்கிவிட்டால் சுலபமாக முடிந்துவிடும் என்பது தளபதி விஜயின் கணிப்பு.
ஏற்கனவே எஸ் ஏ சந்திரசேகர் முன்னணி அரசியல் வாதிகளுக்கு ஆலோசகராக இருந்தார், அதேபோல் தளபதி விஜய்க்கு ஒரு சாணக்கியனாக இருந்து வழிநடத்துவார் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் தளபதி ரசிகர்கள்.