கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் செய்யவிருக்கும் மாற்றம், ரசிகர்கள் செம்ம வருத்தம், இதை மாற்றலாமா?

தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை மக்கள் வரவேற்பார்கள். அந்த விதத்தில் பாடல்கள், ஹீரோயின் இல்லாமல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம் கைதி.

இப்படத்தை லோகேஷ் இயக்க கார்த்தி நடித்தார், எஸ்.ஆர்.பிரபு தயாரித்தார். இப்படம் கடந்த தீபாவளிக்கு வெளிவந்தது.

சுமார் ரூ 105 கோடி வரை இப்படம் உலகம் முழுவதும் ரிலிஸ் ஆனது, தற்போது இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளார்கள்.

இதில் ஹீரோவாக அஜய்தேவ்கன் நடிக்கவுள்ளார், இதன் படப்பிடிப்பு கொரொனா பிரச்சனைகள் முடிந்து ஆரம்பிக்கும்.

இந்நிலையில் இப்படத்தில் புதிதாக ஹீரோயின் கதாபாத்திரம் சேர்க்கவுள்ளார்களாம், அதற்காக கேத்ரீனாவிடம் பேச்சு வார்த்தை நடக்கின்றதாம்.

இதை அறிந்த தமிழ் ரசிகர்கள் ஏன் இந்த வேலை என்று வருத்தப்படுகின்றனர்.