தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் இயக்குனர் அட்லீ.
இவர் ஆர்யா, நயன்தாரா இணைந்து நடித்து வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
இதன்பின் தளபதி விஜய்யுடன் கைகோர்த்து தெறி எனும் வெற்றி படத்தை தமிழ் ரசிகர்களுக்கும் வழங்கினார்.
மேலும் மீண்டும் விஜய்யுடன் கைகோர்த்து மெர்சல், பிகில் என இரு ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது அட்லீ கூறும் கதையை ஏற்க்க தயாரிப்பாளர்கள் யாரும் முன் வர மறுக்கிரர்களாம்.
அது ஏனென்றால் அட்லீ பட்ஜெட் மீறி படம் செலவை படப்பிடிப்பின் போது அதிகரித்து விடுகிறாராம். இதனால் சில நஷ்டங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்படுகிறது இதனால் தான் அட்லீ கூறும் கதையை ஏற்க்க தயாரிப்பாளர்கள் மறுத்து வருகிறார்கள் என சில தகவல்கள் வெளியாகி உள்ளது.