இந்த காரணத்திற்காக செம்பருத்தி சீரியலில் இருந்து தூக்கினார்களா..அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பரதா நாய்டு

செம்பருத்தி இந்த சீரியல் தான் தற்போது சீரியல் உலகின் ராஜா என்று சொல்லாம். ஜீ தமிழில் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த ஒரு சீரியல் மூலம் சன் டிவி சீரியலுக்கே கடும் போட்டி கொடுத்து வருகின்றனர் ஜீ தமிழ் குழுவினர்.

இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் முக்கியமாக கதாபாத்திரத்தில் நடித்த பரதா நாய்டு தற்போது சீரியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆனால், இவரை வெளியேற்றிய காரணம் இது தான் என அவரே கூறியுள்ளார். அதில் நான் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு வரை நடித்துக்கொடுத்தேன்.

திருமணத்திற்காக விடுமுறை கேட்ட ஒரே காரணத்திற்காக என்னை சீரியலில் இருந்து தூக்கிவிட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.

அதோடு அந்த சீரியலில் பல பாலிட்டிக்ஸ் உள்ளது, என்றும் சில அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.