ராம் குமார் இயக்கத்தில் முண்டாசுப்பட்டி படத்தின் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வெளியான படம் ராட்சசன்.
இப்படத்தின் மூலமாக நடிகர் விஷ்ணு விஷாலுக்கு தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் இடம் கிடைத்தது.
மேலும் இப்படத்தில் பள்ளியில் படிக்கும் மாணவிகளை தேர்ந்தெடுத்து கொள்ளும் வில்லன் கிருஷ்டப்பர் கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் தலை சிறந்த வில்லன்ங்களில் இடம்பிடித்து.
மேலும் இப்படத்தில் வரும் ஒவ்வொரு திருப்புமுனை நம்மை அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புக்கு கொண்டு சென்றது.
இந்நிலையில் தற்போது இந்த படம் வெளிவந்த 2 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது என இப்படத்தின் இயக்குனர் ராம் குமார் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில் படம் வெளிவந்து 2 ஆண்டுகள் ஆனபின்னும் தலைசிறந்த தமிழ் படங்களின் IMDB ரேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
அதுமட்டுமின்றி தலைசிறந்த இந்திய படங்களின் IMDB ரேட்டிங்கில் 3ஆம் இடத்தையும் பிடித்து சாதனை செய்துள்ளது.