ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்து வெளியான இது என்ன மாயம் எனும் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்ற நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக விளங்கி தமிழில் வருகிறார்.
மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் மிகவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் செல்லப்பெயர், விக்கிபீடியாவில் இருக்கும் கீர்த்தனா என்பது கீர்த்தி சுரேஷின் செல்லப்பெயர் இல்லை என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்
அவரது உண்மையான செல்ல பெயர் கிட்டி,காயு என்று அதன்பின் பதிவிட்டுள்ளார். ரசிகரின் இந்த பதிவை பார்த்து கீர்த்தி சுரேஷும் சிரித்தபடி ரியாக்ட் செய்துள்ளார்.