பிரபல பாடகர் மரணம்!

உலகளவில் கடந்த 8 மாதங்களாக ஆட்டிப்படைத்து கொண்டு வருவது கொரானா வைரஸ்.

கொரோனாவின் பாதிப்பு தற்போது இந்தியாவில் 27 லட்சமாக இருக்கிறது. இறந்தவர்களின் எண்ணிக்கையோ 51 ஆயிரத்தை கடந்துவிட்டது.

இக்காலகட்டத்தில் இந்நோய் தொற்று அல்லாது மற்ற காரணங்களால் சினிமா பிரபலங்களும் இந்தியாவில் காலமாகியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டும் சிலர் உயிரிழந்துள்ளனர்.

அவ்வகையில் பிரபல ஹிந்துஸ்தானி இசைப்பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் நேற்று (திங்கட்கிழமை) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 90.

அமெரிக்காவில் நியு ஜெர்ஸியில் வசித்து வந்தவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை பூர்வீகமான கொண்டவர்.

இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

80 வருடங்களாக பாடி பல கச்சேரிகளை உலகளவில் நிகழ்ச்சி பல ஆல்பங்களை கொடுத்து சாதனை படைத்துள்ளார்.

ஜஸ்ராஜின் மறைவுக்கு இந்திய பிரதமர், இசைக்கலைஞர்கள் என பலரும் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளனர். அவருக்கு ஷாரங்க் தேவ் என்ற மகனும் துர்கா என்ற மகளும் இருக்கின்றனர்.