பிரபல தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்திய மொழியில் ஆரம்பித்ததை அடுத்து ஒளிப்பரப்பாகி வெற்றியை பெற்று வந்தது. இதில் தமிழில் பங்கேற்ற அனைவரும் தற்போது சினிமா வாய்ப்பு பெற்று பிரபலமாகி வருகிறார்கள்.
அந்தவகையில் இலங்கை செய்தி வாசிப்பாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை லாஸ்லியா. ஆரம்பத்தில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், ரசிகர்கள் மனதை கவர்ந்து வந்தார். நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா போட்டோஹுட் மூலம் இரு படங்களில் நடிக்க கமிட்டாகினார்.
அதில் நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ப்ரண்ட் ஹிப் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் டீசர் போன்ற வீடியோவும், புகைப்படங்களில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த இரு படத்தில் லாஸ்லியாவின் சம்பளம் எவ்வளவு என்று இணையத்தில் கசிந்துள்ளது. இருபடத்திலும் சேர்த்து 25 லட்சம் வாங்கியுள்ளாராம் லாஸ்லியா. முதல் இரு படத்திலேயே லட்சத்தில் புறளுகிறாரே என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.