பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்நிலையில் தமிழிலும் வருகிற செப்டம்பர் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதற்கட்ட பணிகளை தொடங்க பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இதனையும் நடிகர் கமலே தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் கமல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனைக் கண்ட ரசிகர்கள் இது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புதிய லுக்கா என ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.