ஏ வி எம் தமிழ் சினிமாவின் மிகவும் பாரம்பரியமான நிறுவனம். இந்நிறுவனம் தான் தமிழ் சினிமாவின் உயிர்நாடியாக இருந்தது.
இந்நிறுவனம் கடைசியாக சிவாஜி, அயன், வேட்டைக்காரன் ஆகிய படங்களை தயாரித்தது. பின் இவர்கள் ஏன் என்றே தெரியவில்லை படம் தயாரிப்பதையே நிறுத்திவிட்டனர்.
பலரும் எப்போது ஏ.வி.எம் நிறுவனம் மீண்டும் தயாரிப்பு பணிக்கு திரும்பும் என ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் இந்நிறுவனம் சினிமாவில் களம் காணவுள்ளது, ஆனால், தயாரிப்பு பணிக்காக இல்லை.
மிஷ்கின் இயக்கும் ஒரு படத்தை ஏ வி எம் வாங்கி தமிழகம் முழுவதும் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.