தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்ப்பார்க்கும் படங்களில் ஒன்று மாஸ்டர். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளிவருவதாக இருந்தது, ஆனால், கொரொனா காரணமாக இப்படம் தள்ளி சென்றுள்ளது.
தற்போது படம் எப்போது வரும் என படக்குழுவினர்களே தெரியாமல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் இந்த லாக்டவுன் சமயத்தில் தன் ரசிகர் மன்ற நிர்வாகத்தினர் மற்றும் அடுத்தப்படத்திற்கான கதை விவாதங்களில் உள்ளாராம்.
அதோடு சமீபத்தில் விஜய் ரசிகர் ஒருவர் இறந்தார், அவரின் மாமாவிற்கு விஜய்யே போன் செய்து ஆறுதல் கூறியுள்ளார்.
அதோடு அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளையும் செய்துக்கொடுக்க கூறியுள்ளார்.
மேலும் அந்த பையன் கடந்த சில நாட்களாகவே இப்படி டுவிட் போட்டுள்ளான், நீங்கள் ஏன் கவனிக்கவில்லை, எந்த ஸ்டெப்பும் எடுக்கவில்லை என்று மன்ற தலைவர்களிடம் கடுமையாக விஜய் கோபப்பட்டுள்ளாராம்.