பவன் கல்யான், விஜய் சேதுபதி ஒரே படத்தில், செம்ம மாஸ் படத்தை ரீமேக் செய்யவுள்ளார்களாம்….!

விஜய் சேதுபதி கையில் தற்போது அரை டஜன் படங்கள் இருக்கிறது. ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் விஜய் சேதுபதி நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த சைரா படத்தில் நடித்திருந்தார், தற்போது சிரஞ்சீவி தம்பி பவன் கல்யாண் நடிக்கவிருக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிகிறது. இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

பவன் கல்யான் சமீபத்தில் மலையாளத்தில் செம்ம ஹிட் ஆன அய்யப்பனும் கோஷியும் படத்தை பார்த்துள்ளார்.

இந்த படத்தில் போலிஸ் வேடத்தில் நடித்த பிஜுமேனன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

அதே நேரத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க பவன் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.