தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்ப்பார்க்கும் படங்களில் ஒன்று மாஸ்டர். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளிவருவதாக இருந்தது, ஆனால், கொரொனா காரணமாக இப்படம் தள்ளி சென்றுள்ளது.
தற்போது படம் எப்போது வரும் என படக்குழுவினர்களே தெரியாமல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் தற்போது முருகதாஸ் படத்திற்கு ரெடியாகிவிட்டார், அப்படத்தின் படபிடிப்பு எப்போது தொடங்கலாம், கதை விவாதம் என படு பிஸியாக இருக்கிறாராம்.
மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கவுள்ளது, இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விநாயகர் சதுர்த்தி அன்று வரும் என கூறப்படுகிறது.