தமிழ் சினிமாவின் தல என்று அழைக்கப்படுபவர் அஜித். இவருக்கு என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் அஜித் தற்போது வலிமை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார், இந்த படத்தின் படப்பிடிப்பு கொரொனவால் நின்றுள்ளது.
அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் விஸ்வாசம், இப்படம் ரூ 200 கோடி வரை வசூல் செய்தது.
இப்படத்தின் முதல் பாதியில் அஜித் கிராமத்து இளைஞராக நடித்திருப்பார், இது பலரையும் கவர்ந்தது.
நடிகை குஷ்பு தற்போது தன் கணவரின் படங்களை தயாரித்தும் வருகிறார், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார்.
அதில் அஜித்தை வைத்து முழுக்க முழுக்க ஒரு கிராமத்து படம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படி நடந்தால் எப்படியிருக்கும்.