தமிழ் சினிமாவில் உண்மையான கதாநாயகன் என்றால் அது உலக நாயகன் கமல் ஹாஸன் மட்டும் தான்.
ஆம் திரைத்துறையில் உள்ள அனைத்து தொழில்நுட்ப துறையிலும் கைதேர்ந்தவர் நடிகர் கமல் ஹாஸன்.
இவர் நடிதோ அல்லது இயக்கியோ வெளிவந்த பல படங்கள் அப்போது ஓடவில்லை என்றாலும், தற்போது உள்ள ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆம் அதனை லிஸ்ட் போடவேண்டும். என்றால் ஹே ராம், அன்பே சிவம், உத்தமவில்லன் என பட்டியல்யிட்டு கொண்டே போகலாம்.
இதில் திரையரங்கில் மிகப்பெரிய தோல்வியடைந்த ஒரு படம் என்றால், சுந்தர்.சி இயக்கி கமல் ஹாசன் மற்றும் மாதவன் நடித்து வெளிவந்த அன்பே சிவம் படம் தான்.
அப்போதைய காலகட்டத்தில் இந்த படம் மிகப்பெரிய ஃப்ளாப் படம் என்றாலும், தற்போது உள்ள ரசிகர்களிடம் கேட்டால் இது பிளாக் பஸ்டர் ஹிட் படம் என்று தான் சொள்ளவார்கள்.
இந்நிலையில் தற்போது இந்த ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கமல் ஹாசன் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் முன்னணி நடிகரான வில் ஸ்மித் நடிக்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கூடிய விரைவில் இப்படத்தை குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.