விநாயகர் சதுர்த்தி: வழிபட உகந்த நேரம் இதுதான்

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய உகந்த நேரம் குறித்து இங்கு கூறப்பட்டுள்ளது.

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் விநாயகப்பெருமானை முழுமனதோடு பூஜித்து விரதமிருந்து முறையாக வழிபட்டு, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால், நமக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி.

நிகழும் சார்வரி வருடம், ஆவணி மாதம் 6-ம் நாள் 22.08.2020 சனிக்கிழமை அன்று இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்து வழிபட நல்ல நாள்.

கணபதி ஹோமம் செய்ய உகந்த நேரம்

காலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை

விநாயகர் பூஜை செய்ய உகந்த நேரம்

காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

விநாயகர் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய உகந்த நேரம்

காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரைகாலை 8.30 மணி முதல் 9.00 மணி வரைமாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரைமாலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

அலுவலகத்தில் பூஜை செய்ய உகந்த நேரம்

காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரைமாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி வருவதால் விநாயக பெருமானுக்கு சத்துமாவு விசேஷம். இனிப்பு மற்றும் கார மோதகம் செய்வது விசேஷம்.

மேலும், ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம். கணபதி ஹோமத்திற்குக் கொப்பரை கொடுப்பதும் மற்றும் சத்துமாவு கொடுப்பதும் சிறப்பு.