ஆதிபுருஷ் படத்தில் பிரபாஷுடன் இணைந்த பிரபல நடிகை..!!

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஷின் 21 வது படம் பற்றிய அறிவிப்பு அண்மையில் வெளியானது. 3D தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஆதிபுருஷ் என பெயர் வைக்கப்பட்டு அண்மையில் போஸ்டரும் வெளியானது.

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. படத்தின் போஸ்டர் மூலம் ராமாயணத்தின் ஒருபகுதியை தயாரிக்கிறார்களாம்.

ராமராக பிரபாஸ் நடிப்பது பலருக்கும் மகிழ்ச்சியே. அடுத்த வருடம் படப்பிடிப்பை ஆரம்பித்து 2022 ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

இதில் ராவணனாக ஹிந்தி நடிகர் சயீப் அலிகானும் சூர்ப்பபனகையாக மஞ்சு லட்சுமியில் நடிக்கிறார்களாம்.

நடிகை மஞ்சு கடல், காற்றின் மொழி ஆகிய தமிழ் படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.