சர்க்கரை நோயை விரட்டியடிக்க இதை செய்திடுங்கள்

உலகில் அதிகமானோரை தாக்குவது சர்க்கரை நோய் தான். ஆனால் இது நோய் அல்ல. சில உணவு கட்டுப்பாட்டை கொண்டு வந்தால் இந்த நோயை விரட்டியடித்து விடலாம்.

உலகம் முழுவதும் சுமார் 425 மில்லியன் வயதுக்கு வந்த மனிதர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

இதற்கு ஒரே தீர்வு உணவுக்கட்டுப்பாடு தான். கார்போஹைட்ரேட் குறைந்த நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட்டு வந்தாலே போதும்.

சர்க்கரை நோயாளிகள் சில கிழங்கு வகைகளை தவிர்த்து காய்கறிகளும், கீரைகளும் அதிகமாக சேர்த்துக் கொண்டு சாப்பிட்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாம்.

சர்க்கரை நோயாளிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

  • சர்க்கரை நோயாளிகள் மரவள்ளிக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிட கூடாது. இந்த கிழங்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். வாயுத்தொல்லையை அதிகப்படுத்தும். ரத்ததத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்து விடும்.
  • அதிகளவில் பச்சை வேர்க்கடலையை வறுத்தோ அவித்தோ சாப்பிடக்கூடாது. பச்சையாக அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும். தலைசுற்றல் ஏற்படும். கொழுப்பு படிந்து விடும். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரித்து விடும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையிலுள்ள hydroxychalcone என்ற மூலப்பொருளின் ஆக்சிஜனேற்ற பண்பால் இன்சுலினின் உணர்திறன் அதிகரிக்கிறது மற்றும் குளுகோசையும் வேகமாக குறைக்கும்.

எனவே சமைக்கும்பொழுது சிறிதளவு இலவங்கப்பட்டையை சேர்க்க மறக்காதீர்கள் அல்லது காலையில் தேநீர் அருந்தபொழுது சிறிதளவு சேர்த்து கொண்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.