இஞ்சியை எதனுடன் சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

தொன்மையான கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக, பல்லாண்டு காலமாகவே இஞ்சி சிறந்த ஜீரண ஊக்கியாக நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குடலிறக்க பிரச்சனையில் வயிற்றுப்பகுதி தசைகளுக்கு வலுசேர்த்து உதவுவதுடன், வாயு சம்பந்தமான பிரச்சனைகளை களைந்து வயிற்று மந்தம் போன்ற பிரச்சனைகளுக்கு இஞ்சி தீர்வாக அமைகின்றது.

இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்சரால்’ எனப்படும் பொருள் மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும் தன்மை படைத்ததாக இஞ்சி இருக்கிறது.

நவீன விஞ்ஞானத்தில் பலவித புற்றுநோய்களுக்கு இஞ்சி ஒரு சிறந்த தீர்வாக மருத்துவவர்களால் கண்டறிந்துள்ளனர்.

இஞ்சி இப்படி சாப்பிட்டால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

  • இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் சில நோய்களை குணப்படுத்திவிடும்.
  • இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட்டு வந்தால் தீராத மலச்சிக்கல் கூட சரியாகி விடும்.
  • அடிக்கடி மார்பு வலி ஏற்படுகிறவர்கள் இஞ்சியை சாப்பிட்டு வந்தால் மார்பு வலி சரியாகும்.
  • இஞ்சியை சுட்டு உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் குணமாகும்.
  • இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறுகள் சரியாகும்.
  • இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம் குறையும். வாய் நாற்றம் சரியாகும்.
  • காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட உடல் எடை குறையும்.
  • இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம் காலையில் ஒரு கரண்டி குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வருரும்.
  • இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை சாப்பிட்டு வர தொடக்க கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் ஆகியவை சரியாகும்.