சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பல பிரபலங்கள் உழைத்தும் நல்ல படங்களை கொடுத்தும் அத இடத்திற்கு வர கஷ்டப்படுவார்கள். அதை தாண்டி பல கிசுகிசுக்கள் பேசியும் சிலர் பிரபலங்களாகி வருவார்கள். அந்தவகையில் நல்ல பேர் எடுத்து படங்களில் நடித்து சில கிசுகிசுக்களில் சிக்கியவர்கள் சிலரே இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஜெமினி கணேசனுக்கு அடுத்தபடியாக காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். காதல் மன்னன் என்றால் நடிகைகளை தன்னை பின் சுற்ற வைப்பது தான். அப்படியாக தன்னுடைய படங்களில் நடித்து வந்த நடிகைகள் உண்மையாகவே அஜித்தினை காதலித்து வந்தார் என்று என்று பேசிய நடிகைகளை பற்றி பார்ப்போம்.
90-களில் கனவு கன்னியாக வலம் வந்து முன்னணி நடிகர்கள் படத்தில் சில படங்களே நடித்து பிரபலமானவர் நடிகை ஹீரா ராஜகோபால். அஜீத் குமாருடன் சேர்ந்து காதல் கோட்டை என்ற படத்தில் நடித்தவர். நடித்தது மட்டுமில்லாமல் அஜித் மீது காதல் வலையிலும் விழுந்தார் ஹீரா. ஒரு தலைப்பட்சமாக காதலித்து பின் ஹீரா அதித்தின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து காதல் மன்னன் என்ற படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மானு. பாலிவுட் நடிகையாக இருந்து ஸ்ரீதேவியின் உறவினராக இருந்த மானு அஜித்குமாரின் அழகில் மயங்கி தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் அஜித்தின் மானுவின் காதலை மறுத்துவிட்டார் என்று பேசப்படுகிறது.
காதல்கோட்டை படத்தில் முக்கிய கதாநாயகியாக நடித்தவர் நடிகை தேவயாணி இவர் ‘நீ வருவாய் என’ படத்தில் மீண்டும் அஜீத் குமாருடன் இணைத்தார். இவரும் காதல் வலையில் விழுந்து உள்ளார்.
அஜித்தின் அழகில் மயங்கி தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். சில காரணங்களால் அதுவும் தோல்வியில் முடிந்தது.
வான்மதி படத்தில் அஜீத் குமாருடன் ஜோடி சேர்ந்தவர் நடிகை சுவாதி. படத்தில் நடிப்பதற்காக செய்த காதல் உண்மையானது என்று நினைத்து இவரும் காதல் வலையில் வீழ்ந்துள்ளார். ஆனால் சுவாதி சில பேட்டியில் இது ஒரு வதந்தி நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.
ஆனந்த பூங்காற்றே, வில்லன், சிட்டிசன் போன்ற படங்களில் ஜோடி போட்ட கண்ணழகி நடிகை மீனா. தல அஜித்தை சுற்றி சுற்றி காதலித்தாராம், தன் காதலையும் வெளிப்படையாக தெரிவித்தாராம். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக செய்திகள் வெளிவந்தது.
இதையடுத்து, புருனே இளவரசி சாரா அஜித்தின் வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாடலை பார்த்து காதலில் விழுந்துள்ளாராம். அவர் யார் எந்த நாட்டை சேர்ந்தவர் என்றும் உதவியாளர்களிடம் கேட்டு விசாரித்தும் உள்ளார் இளவரசி சாரா.
இந்த செய்தியும் இணையத்தில் பெரிதாக பேசப்பட்டு சினிமா வட்டாரத்தை கதிகளங்க வைத்தது.
இப்படி நடிப்பிற்காக ஏற்பட்ட காதல் உண்மை என்று நினைத்து தல அஜித்தை சுற்றி வந்த நடிகைகளின் பட்டியல் அடுக்கிக் கொண்டே போகலாம். இதையடுத்த்து நடிகை ஷாலினியை பல ஆண்டுகள் காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார் அஜித்.