உத்தரப்பிரதேச சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரிடம் விவாகரத்து கோர கூறியுள்ள காரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதில், தனது கணவன் தன் மீது மிக அதிக அன்பைப் பொழிகிறார் என்றும், தன்னிடம சண்டை இடுவது இல்லை என்றும் அந்த பெண் கூறியுள்ளார். திருமணமாகி 18 மாதங்களில் விவாகரத்து கோரி அப்பெண் ஷரியா நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
விவாகரத்து கோருவதற்கான காரணத்தை அந்தப் பெண் கூறியபோது ஷரியா நீதிமன்றத் தலைவர் அதைக் கேட்டு குழப்பமடைந்தார். அவர் பின்னர் அந்த காரணம் அற்பமான காரணம் என்று கூறி, பெண்ணின் கோரிக்கையை நிராகரித்தார்.
ஷரியா நீதிமன்றத் தலைவரால், மனு குறித்து முடிவு செய்ய இயலாததையடுத்து, இந்த விவகாரம் உள்ளூர் பஞ்சாயத்தை எட்டியது. ஆனால் பஞ்சாயத்தாலும் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியவில்லை. இது விஷயத்தை முடிவு செய்ய முடியவில்லை.
முன்னதாக, ஷரியா நீதிமன்றத்தில் அவர் அளித்த மனுவில், அந்த பெண் தனது கணவரின் அன்பை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறினார்.
மேலும், அவர் என்னை ஒருபோதும் திட்டியதில்லை. எந்த விஷயத்திலும் அவர் என்னை ஏமாற்றியதில்லை. எனக்கு இது பெரும் அன்புத் தொல்லையாக உள்ளது. சில சமயங்களில் அவர் எனக்காக சமைக்கிறார், வீட்டு வேலைகளையும் செய்ய உதவுகிறார்” என்று அந்த பெண் கூறினார்.
தனது கணவருடன் தான் எப்போதும் சண்டையிட்டதில்லை என்பதையும் அவர் ஒரு குறையாகக் கூறியுள்ளார். “நான் தவறு செய்யும் போதெல்லாம், அவர் எப்போதும் என்னை மன்னித்து விடுகிறார்.
எனக்கு அவருடன் வாதாட வேண்டும் போலிருக்கும். ஆனால் அவர் எதற்கும் வாதிட மாட்டார். கணவர் எல்லாவற்றிற்கும் ஒப்புக் கொள்ளும் ஒரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
விவாகரத்து கோருவதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று அந்தப் பெண்ணிடம் கேட்கப்பட்டபோது, அவர் இல்லை என்று பதிலளித்தார். இச்சம்பவம் அங்கு சலசலப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.