பிரபல நடிகரின் மகனா இது?

பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளிலேயே நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி அதனை புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழத்து தெரிவித்தனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில், அவரது மகன் மற்றும் மகள் உள்ளிட்டோர் இருந்தனர்.

இதனையடுத்து ரசிகர்கள் மகேஷ் பாபுவின் மகனை குறிப்பிட்டு அடுத்த ஹீரோ ரெடி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.