சமீபகாலமாக சின்னத்திரைத்திரைக்கு வருபவர்களை விட சின்னத்திரையி பிரபலமாகி அதன்பின் சினிமாவில் வாய்ப்பிற்காக அழைக்கபடுவது தான் டிரெண்ட்டாகியுள்ளது. அந்தவகையில் பிரபலமானவர்கள் அதிகம்.
அந்தவரிசையில் சின்னத்திரையில் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராக அறிமுகமாகி அதன்பின் பிரபல தொலைக்காட்சி சீரியலான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து பிரபலமாகியவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
இதையடுத்து படவாய்ப்புகள் கிடைத்து நடித்து வந்த பிரியா மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். முதல் படமே ஏடாகூடமாக ஹிட்டடிக்க தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்தது.
மேலும் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் ஐந்து மொழிகளில் உருவாகும் அகம் பிரம்மாஸ்மி படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது கொரானா லாக்டவுன் என்பதால் திரைப்படங்கள் எடுப்பது குறைந்து விட்டதால் அனைவரும் வெப்சீரிஸ் இல் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர்.
அதிலும் பிரியா பவானி சங்கருக்கு வாய்ப்புகள் குவிகிறது. சத்தமே இல்லாமல் நடிகர் பரத் மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு வெப் சீரிஸில் நாயகியாக நடித்துள்ளார்.
முதல் முறையாக இந்த வெப்சீரிஸ் மூலம் கிளாமரில் களமிறங்கியுள்ளார். இந்த வெப்சீரிஸ் வெளியானவுடன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் அசால்டாக பிரியா பவானி சங்கர் ஜோடி போட போகிறார் என இப்போதே பேச்சுக்கள் எழுகின்றன.
தற்போது பொம்மை படத்தின் இசைக்கோப்பு பணிகள் நிறைந்த நிலையில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.