இயக்குனர் ராஜமௌலியின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரு. 90 கோடி

மாவீரன் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரமாண்ட இயக்குனர் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இயக்குனர் தான் ராஜமௌலி.

ஸ்டூடண்ட் நம்பர் 1எனும் படத்தின் மூலம் திரையுலகில் ஒரு இயக்குனராக அறிமுகமானார் தற்போதைய பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி.

இதன்பின் சிம்ஹதிரி, sye உள்ளிட்ட படங்களை இயக்கி திரையுலக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முத்திரை பதித்தார்.

இவர் இயக்கத்தில் வெளியான நானி, மாவீரன், பாகுபலி 1 & 2 உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாபெரும் சாதனைகளை படைத்தது.

தற்போது ராம் சரண், மற்றும் ஜூனியர் என்.டி. ஆரை வைத்து RRR எனும் படத்தை இயக்கி இருக்கிறார். சமீபத்தில் கூட இப்படத்தின் கதாபாத்திர டீஸர் வெளிவந்தது.

இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலியின் முழு சொத்து மதிப்பு மட்டுமே நிகர ரு. 90 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவர் பயன்படுத்தும் விலை உயர்ந்த காரின் விலை சுமார் 3.5 கோடி. மற்றும் இவரின் வீட்டின் மதிப்பு சுமார் 5 கோடி என தெரிவிக்கின்றனர்.