தமிழ் திரையுலகில் தற்போது டாப் 10 நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் வுள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கோமாளி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கோடிகணக்கில் வசூல் செய்து சாதனை படைத்தது.
மேலும் இவர் தற்போது பூமி, ஜன கண மன, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதை நாம் அறிவோம்.
சில மாதங்களுக்கு முன்பே வெளிவருவதாக இருந்த பூமி திரைப்படம் கொரானா காரணமாக சற்று தள்ளிப்போனது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி பூமி படத்தின் டிரைலர் வெளிவரும் என தற்போது கோலிவுட் வட்டாரங்களில் லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் படக்குழு விடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.