கடந்த 5 மாத காலமாகவே கொரோனா தொற்றால் நாடு முழுக்க ஊரடங்கு, பொது முடக்கம், படப்பிடிப்பு தடை, தியேட்டர்கள் மூடல் என தொடர் நடவடிக்கைகள் இருந்து வந்தன.
இக்காலகட்டத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் வீட்டில் தற்கொலை செய்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்னும் நீதிமன்ற வழக்கு விசாரணை தொடர்ந்து வருகிறது.
சினிமா, சீரியல் வட்டாரத்தை சேர்ந்தவர்களின் தற்கொலைகள் தொடர்ந்த வண்னம் இருக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 24 ம் தேதி தன் வீட்டில் திடீரென தற்கொலை செய்துகொண்டவர் சீரியல் நடிகை சேஜல் சர்மா.
25 வயதே ஆன இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் தான் சொந்த ஊர். மும்பை தானே மிரா ரோடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சீரியலில் நடித்து வந்துள்ளார்.
அவர் நடித்த தோ ஹேப்பி ஹை ஜி சீரியல் பெரும் வரவேற்பு பெற்ற ஒன்று. இந்நிலையில் சேஜலின் மரண விசாரணையில் கடிதம் ஒன்று கிடைத்தது.
மேலும் சேஜல் டெல்லியை சேர்ந்த மாடல் மற்றும் ஜிம் பயிற்சியாளர் ஆதித்யா வசிஷ்ட் என்பவருக்கு மட்டும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்த விசாரணையில் ஆதித்யா பில்லி சூனியம் செய்தால் விரைவில் பிரபலமாகிவிடலாம் என ஆசை காட்டி சேஜலிடம் தொடர்ந்து பண பறித்து வந்துள்ளார். இதனை உணர்ந்த சேஜலுக்கு அவருக்கும் இடையே கடும் சண்டை நிலவ இறுதியில் சேஜல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
இதனால் போலிசார் ஆதித்யாவை கைது செய்துள்ளனராம்.