ராகு கேது பெயர்ச்சி பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதைப் போல அரசியல் தலைவர்களும் ஆவலுடன் இந்த ராகு கேது பெயர்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி செப்டம்பர் 23ஆம் தேதி நிகழ இருக்கிறது.
இந்த கிரகப்பெயர்ச்சியால் அசுவினி முதல் ஆயில்யம் வரையிலான நட்சத்திரங்களில் பிறந்த அரசியல் கட்சித்தலைவர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
அசுவினி
மேஷம் ராசிக்கு இரண்டாம் வீடான ரிஷப ராசியில் ராகுவும் எட்டாம் வீடான விருச்சிகத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். இந்த ராசியில் உள்ள அசுவினி நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் கட்சித்தலைவர்கள் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள்.
மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் பிரச்சினை தலைதூக்கும் சற்று கவனமுடன் செயல்படவும். தலைமையுடன் நெருக்கம் அதிகரிக்கும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
பரணி
மேஷம் ராசிக்கு இரண்டாம் வீடான ரிஷப ராசியில் ராகுவும் எட்டாம் வீடான விருச்சிகத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். இந்த ராசியில் உள்ள பரணி நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் கட்சித்தலைவர்களுக்கு இந்த கிரகப்பெயர்ச்சியால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் தவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எந்த பிரச்சினை என்றாலும் அடக்கி வாசிக்கவும்.
கார்த்திகை
மேஷம் ரிஷபம் ராசிகளில் கார்த்திகை நட்சத்திரம் உள்ளது. அரசியல் கட்சித்தலைவர்களுக்கு சில பிரிவுகள் வரலாம், புதிய உறவுகள் தேடி வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனம் தேவை. கட்சித்தலைமைக்கு எதிராக செயல்படுவது ஆபத்தானது. அரசியல் சந்நியாசம் போக வேண்டி வந்து விடும்.
ரோகிணி
ரிஷபம் ராசியில் ராகுவும், ஏழாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரகப்பெயர்ச்சியால் ரோகிணியில் பிறந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு புதிய கூட்டணிகள் கை கொடுக்கும். புதிய முயற்சிகளை தயக்கமின்றிச் செய்யலாம். உங்களின் நட்பு வட்டம் பெருகும். எதிரிகள் பிரச்சினை நீங்கும்.
மிருகஷீரிடம்
மிருகஷீரிடம் அற்புதமான நட்சத்திரம். இந்த ராகு பெயர்ச்சியால் இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கட்சித்தலைமையின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தலைமையிடம் விசுவாசமாக நடந்து கொண்டால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவியும் பதவி உயர்வும் கிடைக்கும்.
திருவாதிரை
திருவாதிரை ராகுவின் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் ராகு சஞ்சரித்த சமயத்தில்தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் தலைவர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டது. இப்போது ராகு இடப்பெயர்ச்சியாகி ரிஷபத்திற்கு நகர்வதால் அரசியல் கட்சியினர் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். திடீர் பணவரவும் லாபமும் கிடைக்கும்.
புனர்பூசம்
ராகு கேது பெயர்ச்சி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் கட்சித்தலைவர்களுக்கு சில நன்மைகளை தரப்போகிறது. கட்சியின் மேலிடத்தலைவர்களின் பார்வையால் புதிய பதவிகள் தேடி வரும். நீங்கள் எடுக்கும் முடிவுகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யவும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மக்கள் செல்வாக்கு கூடும்.
பூசம்
ராகு கேது பெயர்ச்சி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் கட்சித்தலைவர்களுக்கு சில நன்மைகளை தரப்போகிறது. கட்சியின் மேலிடத்தலைவர்களின் பார்வையால் புதிய பதவிகள் தேடி வரும். நீங்கள் எடுக்கும் முடிவுகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யவும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மக்கள் செல்வாக்கு கூடும்.
ஆயில்யம்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில சங்கடங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். அரசியல் துறையினர் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கூட்டணி விவகாரங்களில் தலையிட வேண்டாம். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.