2 நாட்களுக்கு குளிக்காமல் இருந்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

பொதுவாகவே தினமும் குளிப்பது, சுத்தமான துவைத்த ஆடைகளை உடுத்தி அன்றைய தினத்தை துவக்குவது சுகாதாரமாகக் கருதப்படுகிறது.

ஆனால் குளிக்காமல் இருப்பதால், அனைவரது உடலிலும் ஒரே மாதிரியான தாக்கங்கள் ஏற்படுவது இல்லை.

சரி, இரண்டு நாட்களுக்கு ஒருவர் குளிக்காமல் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

இரண்டு நாட்கள் குளிக்காமல் இருப்பதால், நமது உடலில் 1000 வகையிலான பாக்டீரியாக்களின் தொற்றுக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

தினமும் குளிக்கவில்லை எனில், சருமத்தில் ஈரப்பதம் குறைந்து, சருமத்தின் மேற்புறத்தில் உப்பு திட்டு போன்று உருவாகும்.

இவை, சருமத்தின் ஆரோக்கியத்தை கெடுப்பவை. இதனால், சருமத் தொற்றுகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

குளிக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் என்ன?

நமது உடலானது சுயமாகவே ஆண்டி-மைக்ரோபயல்களை தயாரிக்கிறது. இவை தீய தாக்கத்தை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கும் திறன் கொண்டுள்ளது.

அன்றாடம் நம் உடலில் உருவாகும் நோய்க் கிருமிகளை அழிக்க வேண்டுமானால், நாம் தினமும் குளிக்க வேண்டும். இதனால் நமது உடலை இயற்கையாக வலுப்படுத்த முடிகிறது.

தேய்த்து குளிக்கும் போது, கண்கள், காதுகள், தொடை மற்றும் மூக்கு ஆகிய உறுப்புகளின் இடுக்குகளில் சரியாக தேய்த்து குளிக்க வேண்டும். ஏனெனில் அந்த பகுதிகளில் மட்டும் பாக்டீரியாக்களின் தேக்கம் அதிகமாக இருக்கும்.

குளிர் காலங்களில் வியர்வை அதிகமாக இல்லை என்பதால், குளிப்பதை தவிர்ப்பது மிகவும் தவறான முறையாகும்.

ஏனெனில் உடலில் வியர்வை சுரக்கவிலை என்றாலும் உடலில் பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ்க்களின் தாக்கம் ஏற்படும். எனவே, குளிர் காலமாக இருப்பினும் தினமும் குளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

முக்கிய குறிப்பு

உடல்நிலை குறைவாக இருந்தாலும், கூட இதமான நீரை கொண்டு அக்குள், முகம், தொடை இடுக்கு, கழுத்து போன்ற பகுதிகளில் தண்ணீரைக் கொண்டு துடைத்து விட வேண்டும். இதனால் பாக்டீரியாக்களின் தாக்கத்தில் இருந்து விடுபட முடியும்.