நாக்கில் வெள்ளைப்படிவது ஏன் தெரியுமா?

நாம் மற்றவர்களிடம் வாய்விட்டு பேசவும், நாம் சாப்பிடும் உணவு நன்றாக பற்கள் அரைக்கத் தக்கவாறு உதவும் ஓர் முக்கிய உறுப்புதான் நம் நாக்கு.

ஆனால், நாக்கைப் பற்றி நாம் அறியாத விஷயங்கள் பல உள்ளன. “நாக்கு, சகல உறுப்புகளோடும் தொடர்புடைய ஓர் உறுப்பு.

நாக்கு, நம் உடம்பின் தன்மையை அப்படியே வெளிக்காட்டும் ஒரு கண்ணாடி .

நாம் மருத்துவர்களிடம் செல்லும் போது மருத்துவர் முதலில் உங்கள் நாக்கை நீட்டு என்று கூறி டார்ச் அடித்துப் பார்ப்பார்கள். அப்படிப் பார்த்த உடனே, நம் உடலுக்கு என்ன பாதிப்பு என்பதை ஓரளவுக்கு அனுமானித்து விடுவார்கள்.

பொதுவாக நம் நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் நம் உடலில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமாகும்.

நாக்கில் ஏற்படும் அறிகுறியை வைத்து நோய் எப்படி கண்டுபிடிப்பது

  • நாக்கு, வெள்ளை நிறத்தில் இருந்தால் வாயில் தொற்றுப்பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.
  • சிவப்பு நிறமென்றால் வைட்டமின் பாதிப்பு, மஞ்சள் நிறமென்றால் நீர்ச்சத்துக் குறைபாடு, நாக்கின் நுணி மட்டும் சிவந்திருந்தால் மனஅழுத்தம், நாக்கின் பின்புறம் சிவப்பு நிறமாகும் பட்சத்தில் சுவாசக் கோளாறுகள் இருப்பதாக அர்த்தம்.
  • நாக்கு வீங்கியிருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது.
  • நாக்கில் வலி எடுத்தால் சர்க்கரை நோய் இருப்பது உறுதி.
  • நாக்கின் இடது மற்றும் வலது பக்கங்களில் பாதிப்பு இருந்தால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அர்த்தம்.
  • நாக்கின் மேற்பரப்பு வறண்டு இருந்தால், ரத்தச்சோகை, அடர்சிவப்பு என்றால் உடல் உஷ்ணம், கறுப்பு நிற புள்ளிகள் இருந்தால் ரத்த ஓட்டத்தில் கோளாறு உள்ளதாக அர்த்தம்.

நாக்கில் வெள்ளை படிந்தால் எதற்கெல்லாம் அறிகுறி

  • சிலருக்கு நாவில் வெள்ளை படிதல் அல்லது புள்ளிகள் போன்று எப்போதும் ஓர் படிமம் படர்ந்திருக்கும்.
  • சில சமயங்களில் நாக்கில் வெள்ளை படிந்திருந்தால் விபரீதமான நோய் தாக்கங்களுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

நாக்கில் ஏன் வெள்ளைபடுகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்

  • வாயில் நீர்வறட்சி, மருந்துகள், நாக்கு அழற்சி, ஈஸ்ட் தொற்று போன்றவற்றால் நாக்கில் வெள்ளை படிய ஆரம்பிக்கும்.
  • இதற்கு மது, புகை, காரமான உணவுகள், வாய் ஆரோக்கியம் சரியாக பல் துலக்காமல், வாய் கொப்பளிக்காமல் இருப்பது தான் முக்கிய காரணமாக உள்ளன.

நாக்கில் வெள்ளை படிதலை தடுக்க

  • தினமும் மறக்காமல் பல் துலக்குவது அவசியம்.
  • சாப்பிட்டவுடன் வாயை நீரால் கொப்பளிக்க வேண்டும்.
  • நாக்கை டங் கிளீனர் அல்லது விரல்களை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
  • மது அருந்திய பிறகு, புகை பிடித்த பிறகு வாய் கழுவ வேண்டும்.