சோபிப் மாலிக்கும், மகேந்திர சிங் டோனியும் ஒரே மாதிரியானவர்கள் என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் டோனி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்கின் மனைவி மற்றும் இந்திய டென்னிஸ் பிரபலம் சானியா மிர்சா இது குறித்து பேசியுள்ளார்.
இந்தியாவில் 2004 ஆம் ஆண்டு ஒரு உள்ளூர் போட்டி நடைபெற்றது. அப்போது மகேந்திர சிங் தோனி சதம் அடித்தார். அப்போது எனது கணவர் சோயப் மாலிக்கும் கலந்துகொண்டிருந்தார். அவரும் சதம் அடித்திருந்தார்.
எனக்கு எப்போதுமே தெரியும் தோனியின் வரைமுறைகளும் எனது கணவர் சோயப் மாலிக்கின் வரைமுறைகளும், திறமைகளும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறது. இதனை நான் பல முறை பார்த்திருக்கிறேன் என சானியா கூறியுள்ளார்.