நிறைய பேர் வீட்டில் பண கஷ்டம், மன குழப்பங்கள் வந்துகொண்டே இருக்கிறது என புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.
பண கஷ்டம், மன குழப்பங்கள் இல்லாத வீடுகளே கிடையாது. அனைத்தையும் கடந்து வாழ்வதுதான் வாழ்க்கை.இந்த பண கஷ்டங்களில் இருந்தும் மன குழப்பத்தில் இருந்தும் விடுபட நம் முன்னோர்கள் சில வழிபாடுகளை கூறியுள்ளனர்.
அது என்ன என்பதை பார்ப்போம்.
கல் உப்பு மஹாலக்ஷ்மியின் அம்சம்.கல் உப்பை திருஷ்டி கழிக்கவும் உபயோகப்படுத்துவார்கள்.
காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்துவிட்டு ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து அந்த நீரில் ஒரு பூ போட்டு பூஜை அறையில் வைத்து விளக்கேற்றி 5 நிமிடம் கண்களை மூடி வழிபடவேண்டும்.
இதே போல் தினமும் செய்து வந்தால் விரைவில் உங்களின் பண கஷ்டங்களில் இருந்தும் ,மன குழப்பங்களில் இருந்தும் விடுபடலாம்.