கொரோனா கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கியது. அதனால், மார்ச் மாத இறுதியில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, நாடே முடங்கியது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என எதுவுமே இயங்க வில்லை.
அவ்வாறு சில தனியார் நிறுவனங்களும் இயங்குவதற்கு சில விதிமுறைகளோடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் வெளியே செல்வது என்பது முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம். அப்படி நீங்கள் ஆபிஸ்க்குச் செல்பவர் எனில் இந்த 10 விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும்.
- வீட்டிலிருந்து புறப்படும்போது, மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். மேலும், ஹேண்ட் சேனிடைஸைரை மறக்காமல் எடுத்துக்கொள்ளவும். டூ வீலரில் இயக்கும் முன் கைப்பிடிகளில் சேனிடைஸைரை அடிக்க மறக்காதீர்கள்.
- ஆபிஸின் கதவுகள் அநேகமாக திறந்தே இருக்கும். ஒருவேளை மூடியிருந்தால் அங்கு செக்க்யூரிட்டி இருந்தால் திறக்கச் சொல்லுங்கள். நீங்களே திறக்கும் சூழல் இருந்தால் திறந்த பின் சேனிடைஸரைக் கொண்டு கையைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
- அலுவலக நண்பர்களைப் பார்த்ததும் கை குலுக்குவது, கட்டிக்கொள்வது போன்றவற்றைச் செய்யாதீர்கள்.
- உங்கள் இருக்கையில் மெளஸ், டேபிள் ஆகியவை சுத்தமாக இருக்கின்றனவா என்று செக் பண்ணுங்கள். இல்லையெனில், சேனிடைஸரைத் தெளித்து சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
- வீட்டிலிருந்தே மதிய உணவு எடுத்துச் செல்லுங்கள். போதிய இடைவெளி விட்டு நன்பர்களோடு உட்காருங்கள். உணவுகளைப் பகிர்ந்துகொள்வதை இன்னும் சில மாதங்களுக்குத் தவிர்க்கவும். வெளியிலிருந்து உணவு ஆர்டர் செய்வதைத் தவிர்க்கவும்.
- மீட்டிங் நடைபெற்றால் போதிய இடைவெளிவிட்டு உட்காருங்கள். எங்கும் தனி மனித இடைவெளியைக் கடைபிடியுங்கள்.
- நண்பர்களோடு வெளியே செல்லும் பழக்கம் உள்ளவர்கள் கொரொனா காலம் முடியும் வரை தவிர்ப்பது நல்லது.
- அவ்வப்போது கைகளைச் சுத்தம் செய்துகொள்ள மறக்க வேண்டாம். அதேபோல மாஸ்க்கின் முன்பக்கம் தொடாதீர்கள்.
- உங்கள் நண்பர்களை அலுவலகத்திற்கு வர வழைத்துப் பார்ப்பதையும் தவிர்த்து விடுங்கள். அது உங்களுக்கும் நண்பருக்குமே நல்லது.
- ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வரும்போது வீட்டுக்கு வெளியில் காலணி அல்லது சூ வைக் கழற்றி பத்திரப் படுத்துங்கள். வீட்டுக்குள் நுழைந்ததும் யாரையும் தொடாது, குளியறைக்குள் சென்று விடுங்கள். அங்கே மாஸ்க்கை கழற்றி அதற்கென தனியாக வைத்திருக்கும் குப்பைத் தொட்டிக்குள் போடவும். உடைகளைக் கலைந்து, சோப்பில் நனைத்து ஊற வைக்கவும். முடிந்தால் துவைத்து விடவும். பின், நன்கு சோப்புப் போட்டு குளித்து விடவும்.