பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் எடை இழப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதனுடன் தேன் சேர்க்கும் போது நமக்கு கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன.
எனவே எடை இழப்பை பெற விரும்புபவர்கள் பூண்டு மற்றும் தேன் சேர்ந்த கலவையை எடுத்துக் கொள்ளுங்கள். எனவே தான் பெரும்பாலான இந்திய சமையல் உணவுகளில் பூண்டை பயன்படுத்துகிறோம்.
பூண்டு மற்றும் தேன் சேர்ந்த கலவை ஒரு சக்தி வாய்ந்த எடை இழப்பு மருந்தாக கருதப்படுகிறது. வெறும் வயிற்றில் பூண்டை எடுப்பது உங்க செரிமானத்தை அதிகரிக்கும்.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவி செய்யும். இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவிலும் முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுக்கு சிறந்த நோயெதிரிப்பு சக்தி கிடைக்கும். குளிர், காய்ச்சல் மற்றும் சலதோஷம் போன்றவற்றில் இருந்து விடுபடுவீர்கள்.
உடல் எடையை குறைக்க முடியும். இந்த பூண்டை தேனில் சேர்க்கும் போது அது ஒரு சக்தி வாய்ந்த டானிக்காக மாறுகிறது. செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலமும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமும் பூண்டு எடையை குறைக்க உதவுகிறது.
தேன் நம்முடைய பசி வேதனையை தடுக்கிறது. இது கொழுப்பு இல்லாத பொருள் என்றாலும் நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாக ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
இந்த சக்தி வாய்ந்த எடை இழப்பு டானிக் செய்வது எப்படி? ஒரு கண்ணாடி ஜாரை எடுத்து அதில் பாதியளவு தேனால் நிரப்பிக் கொள்ளுங்கள்.
சிறிது பூண்டை தோலுரித்து முழு பூண்டு பற்களையும் அதனுள் சேருங்கள். பூண்டு தேனில் முழுமையாக மூழ்க ஊற வேண்டும்.
இதை சில நாட்கள் அப்படியே வைத்து விடுங்கள். பூண்டின் சத்துக்கள் தேனில் ஊறி இறங்கி விடும். உங்க எடை இழப்பிற்கான பூண்டு தேன் டானிக் ரெடி.
இந்த டானிக்கை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்த ஒரு பூண்டு பல்லை எடுத்து அதை நசுக்கி சாப்பிடுங்கள். தினமும் ஒரு மாதத்திற்கு செய்து வர நல்ல வித்தியாசத்தை காண்பீர்கள்.