ஊருக்கு சோறு போட்டாரு, எப்படி இருந்தார் தெரியுமா விஜயகாந்த்- 2K கிட்ஸ் முக்கியமா பாருங்க

விஜயகாந்த் இன்று சமூக வலைத்தளத்தில் ஒரு மீம் மெட்டிரியலாக இருந்து வருகிறார். அவரின் உடல்நிலை மோசமானதை அவர் பேசும் வார்த்தைகளை வைத்து மக்கள் ஏன் சில மீடியாக்களே அவரை கலாய்த்து வந்தனர்.

90ஸ் கிட்ஸுக்கு விஜயகாந்த் அருமை கொஞ்சமாவது தெரியும், ஆனால், 2K கிட்ஸுக்கு தெரியுமா என்றால் கேள்விக்குறி தான்.

அவர்களுக்காக தான் இந்த பதிவு, இன்றைய 2K கிட்ஸ்களிடமும் மிகப்பெரிய ரசிகர்கள் பலம் வைத்துள்ளவர் விஜய்.

ஆனால், விஜய் தன் சினிமாவில் அடுத்தக்கட்டத்திற்கு குறிப்பாக ஏ பி சி என தெரிய காரணம் செந்தூர பாண்டி படம் தான்.

இந்த படம் விஜய்காகவே விஜயகாந்த் நடித்துக் கொடுத்தார், அதன் பின்பே அவரை பலருக்கும் தெரிய ஆரம்பித்தது.

இன்று கொடிக்கட்டி பறக்கும் பல இயக்குனர்கள் இவர் போட்ட சாப்பாட்டில் வளர்ந்தவர்கள் தான், எந்த நேரமும் அவர் வீட்டில் சாப்பாடு போட்டுக்கொண்டு இருப்பார்கள்.

சினிமாவில் கஷ்டப்படும் பலருக்கு அப்போதைய அம்மா மெஸ் கேப்டன் வீடு தான். அதோடு விஜயகாந்த் படப்பிடிப்பு தளங்களில் கூட இவர் பெரியவர் சிறியவர் என்று பார்க்கமாட்டார்.

ஒரு முறை சமுத்திரக்கனி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்துக்கொண்டு இருந்தபோது கூட்டத்தை க்ளியர் பண்ண ஆள் இல்லையாம்.

உடனே விஜயகாந்த் தன் போஷன் முடிந்ததும், அவரே களத்தில் இறங்கி கூட்டத்தை கிளியர் பண்ண ஆரம்பித்தாராம்.

அடுத்த நாள் கூட்டத்தில் இருந்த ஒரு பாட்டி படப்பிடிப்பு நடந்துக்கொண்டு இருக்கும் போதே உள்ளே வந்து விஜயகாந்த் கையை பிடித்து, வா இந்த ரேஷன் கடையில் ஒழுங்காக எதையும் தருவதில்லை, வந்து என்னவென்று கேளுங்கள் என்றாராம்.

உடனே விஜயகாந்த் அப்படியெல்லாம் கேட்க முடியாதும்மா, நா எலேக்‌ஷன்ல நிக்கிறேன், எனக்கு ஓட்டு போடு நான் கேக்குறேன் என்று கூறியதோடு மட்டுமின்றி, 2 பைகள் நிறைய அரிசி கொடுத்த அனுப்பினாராம்.

அப்படிப்பட்டவர் தான் கேப்டன், இன்று அவரை வைத்து கலாய்க்கும் பலரும் அவரின் கடந்த காலத்தை கொஞ்சம் நினைத்து பார்த்தாலே போதும்.

இன்று விஜயகாந்தின் பிறந்தநாள் பலரும் விரும்புவது மீண்டும் உங்கள் கர்ஜனை குரலை கேட்க வேண்டும் என்பது தான்.

பழைய கேப்டனா வாங்க…….