எல்லா காலங்களிலும் நமக்கு மிக மலிவான விலைவில் பப்பாளி கிடைக்கிறது. பப்பாளி “ஏழைகளின் கனி” என்றும் சொல்வார்கள்.
பப்பாளி மிகவும் ருசியானது. இதனை “பழங்களின் தேவதை ” என்றும் சிலர் அழைக்கிறார்கள். மனித உடலை ஆரோக்கியமாகவும், சருமத்திற்கு அழகு சேர்ப்பதிலும் பப்பாளி மிகவும் மகத்தான பலனை தருகிறது.
பப்பாளியை தினமும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு ஊட்டச்சத்துக்களை நாம் பெறலாம். இது பழங்களில் முதன்மையான பழமும் கூட.
பப்பாளியில் 100gm பழத்தில் 43 கலோரிகள் இருக்கின்றன. மஞ்சள் நிற பழங்களில் காணப்படும் கரோட்டின் சத்து இப்பழத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த சத்து புற்று நோய் வராமல் நம்மை தற்காக்கும்.
அதேவேளை எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அதுவே நமக்கு பெரும் ஆபத்தை விளைவித்து விடும்.
அதனால்தான் முன்னோர்கள் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும் என்று சொல்வதுண்டு.
அதேபோல்தான் பப்பாளி பழத்தை நாம் அளவோடு சாப்பிட்டால் பல்வேறு நன்மைகளை பெறலாம். அதுவே அதிகமானால் பப்பாளி பழம் நமக்கு ஆபத்தை கொடுத்து விடும்.
பப்பாளியின் நன்மைகள்
- தினமும் பப்பாளியை சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் நம்மை நெருங்காது. குறிப்பாக பப்பாளியை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் நம் கிட்டகூட வராது.
- பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை சாகடிக்கும் தன்மை கொண்டுள்ளது. பப்பாளி நம் ரத்தத்தில் உள்ள நோய் கிருமிகள் தங்கி அழித்து உடலை ஆரோக்கியமாக வைக்கும்.
- குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை உண்ண கொடுப்பதால் அவர்களின் பற்கள் மற்றும் எலும்புகள் மிகவும் உறுதியாக இருக்கும்.
பப்பாளி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி பார்ப்போம்
- கர்ப்பிணி பெண்கள் முதல் 2 மாதங்கள் இப்பழத்தை உண்ணாமல் இருப்பது நல்லது.
- அதிகம் பழுக்காத பப்பாளியை சாப்பிட்டால் பெண்களுக்கு கருகலைப்பு ஏற்படும்.
- அதிகளவில் பப்பாளி காயை சாப்பிட்டால் வயிற்று போக்கு ஏற்பட்டு வயிற்று வலி வரும்.
- இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- வயிற்றில் ஒருவித எரிச்சல் உண்டு பண்ணும்.
- செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
- பப்பாளி விதையிலுள்ள ”கார்பைன்” என்ற நச்சானது, நாடித்துடிப்பை குறைப்பதோடு, நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.