மார்ச் மாதம் இறுதியில் தொடங்கிய ஊரடங்கால் சீரியல், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. அண்மையில் தான் படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.
சீரியல், சினிமா வட்டாரத்தில் மகிழ்ச்சியான விஷயங்கள் ஒருபுறம் சோகமான சம்பவங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் ஹிந்தி சினிமாவை சேர்ந்த நடிகை Trupti Shankhdhar அப்பாவுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தாயுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனால் போலிசில் அவர் 19 வயதுள்ள தன்னை தன் அப்பா 28 வயதுள்ள ஆணுக்கு திருமணம் செய்துவைக்க வற்புறுத்திவதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் அப்பா தன்னை அடித்து காயம் ஏற்பட்டுள்ளதாகவும், முடியை வெட்டி டார்ச்சர் செய்ததாகவும் புகார் அளித்துள்ளார்.