காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்திருக்கும் பிரபல நடிகர்- அவரின் தற்போதைய நிலை வீடியோவுடன் இதோ

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் கருணாகரன். கொரோனா காரணமாக எல்லோரும் வீட்டில் உள்ளோம், ஆனால் இவர் மற்றொரு காரணத்திற்காகவும் வீட்டிலேயே உள்ளார்.

என்னவென்றால் சிறிய விபத்தில் கருணாகரனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

அவர் இப்போது எப்படி உள்ளார் என்று விஷ்ணு விஷால் வீடியோவாக இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதில் கருணாகரன் கண் போன போக்கிலே கால் போகலாமா என்ற பாடல் கேட்டபடி நடிகர் உள்ளார்.

விஷ்ணு தனது பதிவின் கீழ் எப்படி அடிபட்டது என்பதை கருணாகரன் மறைக்கிறார், அதில் ஏதோ இருக்கிறது என்று காமெடியாக பதிவு செய்துள்ளார்.