மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணங்கள்!!

ரத்தக் குழாய்கள் வீங்குவதாலும், இதயத்திற்கு ரத்தம் செல்வது கொஞ்சம் தடைப்படுவதால்தான் நமக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 35 சதவீதம் பேர் காற்று மாசினால் கூட இந்த நோய்க்கு ஆளாகின்றனர் என்று மருத்துவ ஆய்வகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

மாரடைப்புக்கு ஆரம்ப அறிகுறியே மார்பு இறுக்கம்தான். மார்பு இறுக்கம் மார்பின் நடுப்பகுதியில் நெஞ்சு எலும்புக்குப் பின்புறம் தோன்றும். இரு தோள்களில் முக்கியமாக இடது தோளில் ஆரம்பித்து கைகள், கழுத்து, தாடை, முதுகு போன்ற பகுதிகளுக்கும் வலி பரவலாம்.

சில சமயங்களில் குறிப்பிட்டப் பகுதியில் மட்டுமே வலி தோன்றலாம். பொதுவாக நோயாளிகள் இதை வாயுக் கோளாறு என்று அசட்டையாக இருந்துவிடுவார்கள். அப்படி ஒருபொழுதும் இருக்கக் கூடாது.

இந்த மார்பு இறுக்கத்தால் இதயத் தசைகள் சேதம் அடைவதில்லை. ஆனால் எந்த நேரத்திலும் ரத்த நாளங்கள் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டு விடலாம். சாதாரண மார்பு இறுக்கமா அல்லது மாரடைப்பா என்று மருத்துவரால்தான் கண்டறிய முடியும். எப்போதும் நாம் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

மாரடைப்பின் அறிகுறிகள்

  • மூச்சிரைப்பு
  • குமட்டல்
  • வாந்தி
  • அஜீரணம் கோளாறு
  • அசௌகரியம்
  • வெளிறிய தோல்
  • பலவீனமான நாடித்துடிப்பு
  • ஏறி இறங்கும் இரத்த அழுத்தம்
  • அமைதியின்மை
  • சோர்வான மற்றும் கவலையான எண்ணங்கள்

எந்த காரணங்களுக்காக மாரடைப்பு வரும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

உடல் பருமன், சர்க்கரை நோய்

  • உடல் பருமன், மாரடைப்புக்கு மிக முக்கிய காரணம். உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் எளிதில் அவர்களுக்கு வரக்கூடும். ‘
  • சர்க்கரை நோய், உடல் பருமன் இரண்டும் ஒன்று சேரும்போது, கரோனரி ரத்தக் குழாய்கள் வீங்கி, மாரடைப்பு வரக்கூடும்.
  • கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருந்தால், அவை இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் மெல்ல மெல்ல படிந்து, ரத்த ஓட்டத்தைத் தடைசெய்துவிடும்.
  • சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்காமல் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
  • சர்க்கரை நோய் காரணமாக ரத்தக் குழாய்கள் வீங்கி, ரத்தம் செல்வது தடைப்பட்டு, மாரடைப்பு வர வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது.

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் உள்ளது. எனவே, எப்போதும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

புகைப்பிடித்தல்

  • தொடர்ந்து புகைபிடிப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது.
  • புகையிலையில் உள்ள நிக்கோடின் மற்றும் சில வேதிப் பொருட்கள் நுரையீரலில் படிந்து, நுரையீரலின் செயல்திறனைக் குறைக்கச் செய்யும். இவை ரத்தக் குழாய்களிலும் படிந்து விடும். இதனால் கூட மாரடைப்பு வர வாய்ப்புகள் உள்ளன.
  • சிகரெட் பிடிப்பதால் பல்வேறு வேதிப்பொருட்கள் ரத்தக் குழாயில் படியும்போது, இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் தடைப்படுவதால், மாரடைப்பு வரலாம்.

நுரையீரல் நோய்கள்

  • ‘நிமோனியா’ எனும் நுரையீரல் அழற்சி நோய், நுரையீரல் உறைக் காற்று நோய் (Pneumo thorax), நுரையீரல் உறை அழற்சி நோய் (Pleurisy), கடுமையான காச நோய் ஆகியவற்றிலும் நெஞ்சு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கக் கூடும். வலி அதிகமாகும். காய்ச்சல், சளி ஏற்படும்; பசி குறையும். இந்த வலி பொதுவாக இளம் வயதினருக்கும் நடு வயதினருக்கும் வரக்கூடும்.
  • நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சில் வலி வரலாம். அப்போது சளியில் ரத்தம் கலந்து வரும். இது பெரும்பாலும் 50 வயதுக்குப் பிறகு வரும். மேற்சொன்ன அறிகுறிகள் மூலம் மாரடைப்பிலிருந்து மற்ற பிரச்சினைகளைப் பிரித்துணரலாம்.