தந்தைக்கு வாழ்த்து கூறிய வனிதாவை கேலி செய்த ரசிகர்…

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜயகுமார் பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்கு அவரது மகள்கள் ஸ்ரீதேவி, வனிதா மகன் அருண் விஜய் என வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தனது மூன்றாவது திருமணத்தினால் பயங்கர சர்ச்சையில் சிக்கி ஓய்ந்த வனிதா, சமீபத்தில் அவரது கணவர் பீட்டர் பாலுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு, பின்பு மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் வனிதாவின் தந்தையின் பிறந்தநாளுக்கு வனிதாவின் தங்கையான நடிகை ஸ்ரீதேவி தானும், தனது தந்தையும் இருக்கும் புகைப்படத்தினை தனியாகவும், காணொளியாகவும் மாற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு போட்டியாக வனிதா தான் குழந்தையாக இருக்கும் போது தனது தந்தை விஜயகுமாருடன் இருந்த புகைப்படத்தினை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

வழக்கம் போல வனிதாவின் இந்த வாழ்த்தையும் அவரது குடும்பத்தினர் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் விஜயகுமாருக்கு வாழ்த்து சொன்ன வனிதாவை ட்விட்டர் வாசி ஒருவர், சில வருடங்களுக்கு வனிதாவை உங்கள் தந்தை குறித்து நீங்கள் நினைத்த அனைத்து பேட்டியும் நினைவிருக்கிறது தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

எந்த நிலைமையிலும் பெற்றோர்களைப் பற்றி தப்பாக பேசினவங்க ஒருநாளும் வாழ்ந்ததா சரித்திரமே இல்லை. இப்போது நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள் என்று கேலி செய்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த வனிதா, அது நான் சந்தித்த என்னுடைய பிரச்சனை மேலும் எனது குடும்பத்தினர் பற்றி பேச எனக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. நான் எனக்கு நன்றாகத்தான் இருக்கிறேன். நல்லாவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

ஆண்டவனே என் பக்கம் தான் இருக்கிறான். எனவே மூடிட்டு உன் வாழ்க்கையே பாரு என்று பதிலடி கொடுத்திருக்கிறார் வனிதா.

https://twitter.com/vanithavijayku1/status/1300318695181316101