குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை போக்க இதோ சில இயற்கை மருத்துவ குறிப்புகள்!

மழைக்காலம் வந்துவிட்டால் விட்டாலே போதும் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்றவை தானே வந்து ஒட்டி கொள்ளும்.

இதற்காக கண்ட கண்ட மருந்துகளை வாங்கி போடுவதை தவிர்த்து விட்டு சில எளிய வீட்டு பொருட்களை கொண்டு எளிய முறையில் சளியை போக்க முடியும்.

அந்தவகையில் தற்போது குழந்தைகளுக்கு எற்படும் சளியை போக்க உதவும் இயற்கை வைத்தியங்கள் என்னென்ன என்பதை பாரப்போம்.

  • முருங்கைக் கீரையும், உப்பையும் கசக்கி 3 ஸ்பூன் அளவு கொடுத்தால் வாந்தியாக வெளியே வந்துவிடும்.
  • சிறு குழந்தைகளுக்கு சளி பிடித்து மூக்கடைத்துக் கொள்ளும்போது சுத்தமான துணி அல்லது பஞ்சு கொண்டு சுடுநீரில் உப்புக் கலந்துதொட்டுத் துடைக்கலாம். மூக்கடைப்பு நீங்கும்.
  • குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டால், குப்பைமேனி இலையையும், உப்பையும் கசக்கி 5 ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் கொடுத்தால் வாந்தியாக வெளியே வந்துவிடும்.
  • சுக்கை சுட்டு பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட உடலிலுள்ள சளி விரைவில் வெளியேறிவிடும்.
  • எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். மிளகுத் தூளையும், மஞ்சஐயும் பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.
  • நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும். புதினா இலை, மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.
  • ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.
  • பூண்டை தேனுடன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சளி தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிலும் 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்.
  • 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.