பவன் கல்யாண் பிறந்தநாள்!!

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பிறந்தநாளையொட்டி பேனர் வைக்க சென்ற ரசிகர்கள் 3 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவரது ரசிகர்களும் திரை பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பவன் கல்யாணுக்கு பேனர் வைக்க முயன்ற ரசிகர்கள் 3 பேர் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சாந்திபுரம் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் சிலர், பவன் கல்யாணுக்கு 25 அடி உயர பேனர் வைக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மின்சார கம்பிகள் அவர்கள் மீது உரசியதில், சோம சேகர், அருணாச்சலம் மற்றும் ராஜேந்திரன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர

இதனிடையே பவன் கல்யாண் ரசிகர்களின் மறைவையொட்டி அவர்களுடைய குடும்பத்தினருக்குத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளனர்.  அந்தவகையில் பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் ‘வக்கீல் சாப்’ படத்தைத் தயாரித்து வரும் தில் ராஜு மற்றும் போனி கபூர் ஆகியோர் இணைந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அதே போல, நடிகர்கள் ராம்சரண், அல்லு அர்ஜுன் ஆகியோரும் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.