கரண் ஜோஹர் தான் பாலிவுட் மாஃபியா கும்பலில் முக்கிய குற்றவாளி – நடிகை கங்கனா ரணாவத்!

பாலிவுட் திரையுலக மாஃபியா கும்பலில் கரண் ஜோஹர் தான் முக்கிய குற்றவாளி என கங்கனா ரணாவத் குற்றஞ்சாட்டியுள்ளார். 

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு பாலிவுட் திரையுலகமே பரபரபப்பாக உள்ளது. அவரது மரணம் தற்கொலை என தொடக்கத்தில் கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சுஷாந்த் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அதில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும் ஒருவர். இதுமட்டுமல்லாமல் பாலிவுட்டில் இருக்கும் பிரச்சனைகளையும் அவர் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் திரையுலக மாஃபியா கும்பலில் கரண் ஜோஹர் தான் முக்கிய குற்றவாளி என கங்கனா குற்றஞ்சாட்டியுள்ளார். பிரபலங்களின் குழந்தைகளுக்கு மட்டுமே பாலிவுட்டில் அதிகம் வாய்ப்பு அளிப்பவர் கரண் ஜோஹர் என அவர் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும் பலரது வாழ்க்கையை சிதைத்தவர் சுதந்திரமாக சுற்றி வருவதாக குறிப்பிட்ட அவர், அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார். பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தை டேக் செய்து ட்விட்டரில் இதனை பதிவிட்டுள்ளார்.

சுஷாந்த் பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு கரண் ஜோஹர் தடையாக இருந்தததாக வெளியாகும் தகவல் தொடர்பாக அவரது ரசிகர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்கு கங்கனா இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.முன்னதாக, பாலிவுட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிகமாக இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். ரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டால் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.