கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக் வாசு. பின்னர் ஆஃபிஸ், கல்யாணம் முதல் காதல் வரை, பாசமலர், பிரியமானவள் என பல சீரியல்களில் நடித்திருந்தார். தற்போது பூவே பூச்சூடவா, ஓவியா சீரியலில் நடித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் மீண்டும் சீரியல்கள் படப்பிடிப்பு தொடங்கிய மகிழ்ச்சிக்கிடையில் அவரின் மனைவி நந்தினி தேவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்த இனிய நிகழ்வின் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட ரசிகர்கள், ரசிகைகள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.