நடிகர்கள் தங்களது ஒவ்வொரு படமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தேர்வு செய்வார்கள்.
அதிலும் 25, 50, 75, 100வது படங்கள் எல்லாம் மிகவும் சிறந்த கதையாக இருக்க கதைகளை பார்த்து பார்த்து உறுதிப்படுத்துவார்கள். அப்படி தன்னுடைய 50வது படத்தில் வில்லனாக நடிக்கலாம் என கதை தேர்வு செய்து அதில் நடித்து மாபெரும் வெற்றி கண்டார் அஜித்.
மங்காத்தா படம் படு வெற்றி படமாக அவருக்கு அமைந்தது, தற்போது ரசிகர்களின் பெரிய கேள்வி மங்காத்தா 2 எப்போது வரும் என்று தான்.
ஆனால் இதுகுறித்து பிரபலங்கள் ஒருவரிடமும் பதில் இல்லை, அஜித் மட்டுமே கூற வேண்டிய கேள்வி இது. இந்நிலையில் நடிகர் சுப்பு பஞ்சு ஒரு பேட்டியில், 10 வருடத்திற்கு முன்பே மங்காத்தா 2 கதையை வெங்கட் பிரபு எழுதிவிட்டார்.
இரண்டாவது பாகம் தயாராக அஜித் ஓகே சொன்னால் உடனே படம் தயார் தான் என்று கூறியுள்ளார்.