குடும்ப பாரத்தை சுமந்த கோவை சரளா! நடிப்பை விடவும் ஒரு படி உயர வைத்த சோகமான பக்கங்கள்

நடிகை கோவை சரளா தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகையாகவும் நகைச்சுவை நடிகையாவும் இருப்பவர். இவர் இது வரை திருமணம் செய்ய வில்லை.

அதற்கான காரணத்தை கூறி அவரே நெகிழ்ந்துள்ளார்.

750 படங்களுக்கு மேல் நடித்து வரும் நடிகை கோவை சரளா, நடிகர் கமலுடன் சதிலீலாவதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். கோவை ஸ்லாங்கில் பட்டைய கிளப்பினார். பின்னர் கரகாட்டக்காரன் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

தொடர்ந்து ஏரளாமான படங்களில் நடித்துள்ள நடிகை கோவை சரளா தற்போது அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார்.

விவேக், செந்தில், கவுண்டமணி, வடிவேலு ஆகிய நடிகர்களின் காம்பினேஷனில் கோவை சரளாவின் காமெடிகள் வேற லெவல். சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி சேனல்களிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் 58 வயதாகியும் நடிகை கோவை சரளா ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற காரணம் வெளியாகியுள்ளது.

அதாவது கோவை சரளாதான் அவரது வீட்டிற்கு மூத்த மகளாம். அவருக்கு கீழ் நான்கு சகோதரிகள் ஒரு சகோதரர்.

நடிகை கோவை சரளா, தனக்கு கீழ் பிறந்தவர்களுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்துள்ளார். அதோடு அவரது பிள்ளைகளை படிக்க வைப்பதில் இருந்து சகலத்தையும் கோவை சரளாதான் பார்த்து வருகிறாராம்.

அதோடு ஆதரவற்றோருக்கான ஆசிரமங்களுக்கும் அவர்தான் உதவி செய்து வருகிறார். தன் வாழ்நாள் முழுக்க அடுத்தவருக்கு உதவி செய்வதுதான் நோக்கம் என இருந்து வருகிறார் .

மேலும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கவலை தனக்கு இருந்ததே இல்லை என்றும் கூறியுள்ளார். எனினும், எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும், சொந்தங்கள் இருந்தாலும் திருமணம் என்பது பெண்ணுக்கு அவசியம் என்பதால் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியே.

எனினும், தன் உடன் பிறந்தவர்களுக்காக தான் திருமணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்து அவர்களின் குழந்தைகளையும் தன்னுடைய குழந்தைகளை போல் பாவித்து வரும் கோவை சரளாவை ரசிகர்கள் மனதில் தன்னுடைய நடிப்பை விடவும் ஒரு படி உயர்ந்து விட்டார்.