இன்ப அதிர்ச்சி கொடுத்த வனிதாவின் தங்கை!

நடிகை பிரீத்தா விஜயகுமார் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் சில நாட்களுக்கு முன்பு முடக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் எந்த ஒரு பதிவையும் பார்க்க முடியாமல் தவித்து வந்த பிரீத்தா விஜயகுமார் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் ஒன்றை அளித்துள்ளார்.

ஒரு காலத்தில் சினிமாவில் வெற்றி நாயகியாக வலம் வந்த பிரீத்தா விஜயகுமார் 2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் எதிலும் கவனம் செலுத்தாமல் இருந்த பிரீத்தா ரசிகர்களுக்காக அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்வித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் எதிர்பாராதவிதமாக இவரின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் முடக்கப்பட்டு இருந்த நிலையில் ” நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்றவாறு ஒரு வழியாக அந்த அக்கவுண்ட்டை மீட்டுள்ளார்.

பல நாட்களாக இவரது பதிவுகளை பார்க்காத ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக “வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு” என அற்புதமான புகைப்படத்தை பதிவிட்டு, ஒருவழியாக எனது அக்கவுண்டை மீட்டு விட்டேன் என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார்.

பிரீத்தாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். அவர் வெளியிட்ட புகைப்படங்களையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதேவேளை, பிரீத்தா நடிகை வனிதாவின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.