இந்த ஊதா நிற பழத்தில் பல அற்புத பலன்கள் உள்ளதாம்!

நாவல்பழம் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது, அனைத்து ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது.

இவற்றின் பழம், விதை, இலை, பட்டை என்று அனைத்துமே சித்த மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

இந்த பழத்தில் ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிருக்ட்ரோஸ், க்ளுகோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

அந்தவகையில் நாவல் பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி காண்போம்.

  • நாவல் பழத்தினை இதனை தினமும் உண்டு வரும்போது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். மேலும் உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் காக்கின்றது.
  • நாவல் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.இது உங்கள் உடலுக்கு பலவித நன்மைகள் அளிக்க கூடிய ஒன்று ஆகும். எனவே நாவல் பழத்தினை உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள்.
  • நவல் பழத்தில் உங்கள் உடலில் இரத்த உற்பத்தியினை அதிகரிக்கும் மற்றும் உங்களுக்கு இரத்த சோகை நோய் வராமல் காக்க உதவுகின்றது.
  • நாவல் பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளதால் உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும். மேலும் மூட்டுக்களில் உள்ள ஜவ்வு மற்றும் தசை நார்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் சி மிக மிக முக்கியம்.
  • நாவல் பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உறிஞ்சுவதற்கு மெக்னீசியம் மிகவும் உதவியாக இருக்கும். எனவே எலும்புகளின் வலிமையினை அதிகரிக்க தினமும் நாவல் பழத்தினை உண்டு வாருங்கள்.
  • நாவல் பழத்தில் அதிக அளவு இரும்புசத்து நிறைந்துள்ளது. இதனை அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்படாமல் காக்க உதவும்.
  • நாவல் பழத்தில் தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். மேலும் உங்களுக்கு நோய் வராமல் காக்க உதவும்.
  • நாவல் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது உங்களுக்கு புற்று நோய் வராமல் காக்க உதவுகின்றது.