காய்ச்சல் இருக்கும் போது இந்த உணவுகளை தொட்டுக்கூட பார்க்காதீங்க!!!!

காய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல. மாறாக நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி போராடுவதன் பாகம் தான் காய்ச்சல்.

நோயுண்டாக்கும் அனேக பாக்டீரியாக்களும் வைரஸ்களும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும்.

ஆனால், உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது.

அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும், antibody-களையும் உருவாக்குகிறது.

நோய்களை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராகச் சண்டைபோட்டு அவற்றை உடலில் இருந்து வெளியேற்றிவிடும் அல்லது அழித்துவிடும்.

நீங்கள் உட்கொள்ளும் வைட்டமின்கள் (Minerals) மற்றும் கனிமங்களின் (Vitamins) அளவைப் பொறுத்துத்தான் இந்த சக்தி இயங்கும்.

ஆனால் காய்ச்சல் இருக்கும்போது சில உணவுப்பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்தால் உடல் உபாதைகள் ஏற்படாமல் தவிர்த்து விடலாம்.

பால்

காய்ச்சல் இருக்கும் போது பால் குடிக்கக்வடாது. காய்ச்சல் இருக்கும்போது பால் குடித்தால் நுரையீரலில் சளி உற்பத்தியை அதிகரித்திவிடும். பால் உங்களுடைய மூச்சு விடுதலை கடினமாக்கிவிடும். மார்பு எரிச்சல் மற்றும் மூக்கு அடைப்பை அதிகமாக்கிவிடும்.

இறைச்சி

காய்ச்சல் இருக்கும் போது சிவப்பு இறைச்சி சாப்பிட்டால் எளிதில் ஜீரணிக்காது. இதனால் உங்கள் உடல் அதிகம் சிரமப்படும்.

காரமான உணவுகள்

காய்ச்சல் இருக்கும்போது காரணமான உணவுவகைகளை சாப்பிட கூடாது. காரமான உணவுகளுக்கு பதில் உடலுக்கு அதிக ஆற்றலைத் தரும் மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எண்ணெய் / பொரித்த உணவுகள்

காய்ச்சல் இருக்கும் போது எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அப்படி எண்ணெய்யில் பொரித்த உணவு சாப்பிட்டால் உங்கள் உடல் உணவு செரித்தலுக்கு அதிக ஆற்றலை செலவளிப்பதை விட வைரஸ் தொற்றுக்கு எதிராக போராட அதிக ஆற்றலை செலவிடத் தொடங்கிவிடும்.

சீஸ்

காய்ச்சலால் அவதிப்படும் சீஸ் பாலாடைக்கட்டி சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் நுரையீரலில் அதிக சளி உற்பத்தியாகி, மார்பு எரிச்சலுக்கு வழி வகுத்து விடும்.

டீ / காபி

கண்டிப்பாக காய்ச்சல் இருக்கும்போது டீ, காபி சாப்பிடவே கூடாது. டீ, காபி குடித்தால் உங்களின் உடலில் இருந்து தண்ணீர் வெளியேறி உடலில் நீரிழப்பு ஏற்படும்.