தனுஷின் D-43 படத்தின் செம்ம அப்டேட்..!!

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன்.

இப்படத்தை தொடர்ந்து நரகாசுரன் எனும் படத்தை இயக்கி தற்போது வரை அப்படத்தை வெளியிட முடியாமல் தவித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் உருவான இவரின் மூன்றாம் படம் மாஃபியா சப்ட்டர் அருன் விஜய்யின் நடிப்பில் வெளிவந்தது.

மேலும் தற்போது தனுஷுடன் முதன் முறையாக கைகோர்துள்ளர் கார்த்திக் நரேன். ஆம் இப்படத்திற்கு பெயர் வைக்காத காரணத்தினால் தற்போது D43 என அழைக்கப்பட்டு வருகிறது.

இப்படத்திற்கு முன்னனி இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் இசையமைக்க துவங்கியுள்ளார்

இந்நிலையில் D43 படத்தின் அப்டேட் என்னவென்றால் இப்படத்தின் இசை வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று சில தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் மிகவும் முக்கிய அப்டேட், இப்படத்தில் தனுஷின் ஜோடியாக, மாஸ்டர் படத்தின் கதாநாயகியும், மிகவும் சென்சேஷன் நடிகையுமான மாளவிகா மோகனன் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.