இதை இருமுறை தேய்த்தால் போதும் வழுக்கை வந்த இடம் தெரியாமல் ஓடி விடும்!

அழகான தோற்றத்துக்கு கூந்தலின் பங்கும் அவசியமானது. இருபாலருக்கும் இது பொருந்தும்.

வயதான காலத்துக்குப் பிறகு உண்டாகும் வழுக்கை தலை எல்லாம் இப்போது இளவயதிலேயே சந்திக்கிறார்கள்.

எதையும் ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை செய்தாலே முழுவதுமாக சரிசெய்துவிடமுடியும். அது வழுக்கை விஷயத்துக்கும் நிச்சயம் பொருந்தும்.

இதன் மூலம் குறிப்பிட்ட வருடங்கள் வழுக்கையை தள்ளிப்போடவும் முடியும். இப்போது சொல்லும் மூலிகை நிச்சயம் பலன் தரக்கூடியவையே என்பதால் இதை முயற்சிசெய்யலாம்.

கீழாநெல்லி

கீழாநெல்லி குளிர்ச்சி மிகுந்தது. கூந்தல் உஷ்ணத்தால் அதிகமாக உதிரும் போது இதை அரைத்து தலையில் தடவினால் கூந்தல் பிரச்சனை சரியாகும்.

அதனால் தான் கூந்தல் தைலம் காய்ச்சும் போது கீழாநெல்லியை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

கூந்தல் பிரச்சனையில் மிக முக்கியமாக வழுக்கை தலையில் முடி வளர இவை பெரிதும் பயன்படும். இதை உரிய முறையில் பயன்படுத்தினாலே போதும்.

தயாரிப்பு முறை

கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிது சிறிதாக துண்டுகளாக வெட்டி அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை தலையிலும் முடி வளரும்.

தினமும் இரண்டு வேளை வழுக்கை இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நாளடைவில் முடி வளர்வதை பார்க்கலாம்.